தீபாவளி: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? புகார் எண்கள்!

தீபாவளி பண்டிகை காலத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க உதவி எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் வியாழக்கிழமை(அக். 31) கொண்டாடப்படவுள்ள நிலையில், நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு இந்த வார இறுதி முதல் மக்கள் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

மூன்று மாதங்களுக்கு முன்னதாக ரயில்களிலும், ஒரு மாதத்துக்கு முன்னதாக அரசு இயக்கும் ஆம்னி பேருந்துகளிலும் டிக்கெட் முன்பதிவுகள் நிறைவடைந்துவிட்டன. ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது அறிவிக்கும் சிறப்பு ரயில்களிலும் உடனடியாக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க : தீபாவளியையொட்டி 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர்

இந்த நிலையில், தமிழக அரசுத் தரப்பில், தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 11,176 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ள நிலையில், இதனை ஒருங்கிணைக்கவும் பயணிகளுக்கு உதவுவதற்காகவும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவைகள் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு 9445014436 என்ற எண்ணில் மக்கள் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் ஆம்னி பேருந்துகளில் பண்டிகை காலத்தை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151, 04424749002, 04426280445, 04426281611 ஆகிய எண்களில் பயணிகள் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்

குஜராத்தில் 427 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

தலித் இளைஞர் கொலை வழக்கு: ஆந்திர முன்னாள் அமைச்சரின் மகன் கைது!