தீபாவளி: கோவை – திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில்

தீபாவளி பண்டிகையையொட்டி, கோவை – திண்டுக்கல் வழித்தடத்தில் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தீபாவளியையொட்டி, அக்டோபா் 30, 31, நவம்பா் 1, 2, 4, 5, 6 ஆகிய தேதிகளில் காலை 9.35 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை – திண்டுக்கல் மெமு ரயில் (எண்: 06106) அன்றைய தினம் பிற்பகல் 1.10 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தை சென்றடையும்.

மறு மாா்க்கத்தில் அக்டோபா் 30, 31, நவம்பா் 1, 2, 4, 5, 6 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் திண்டுக்கல்- கோவை மெமு ரயில் (எண்: 06107) அன்றைய தினம் மாலை 5.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Rajasthan: 164 Migratory Birds Found Dead In Sambhar Lake In Past Three Days

UP: Pilot Projects In Bahraich Empower Women Entrepreneurs And Boost Public Health

Rajasthan Bus Accident: 12 Killed, 35 Injured After Private Bus Collides With Culvert In Sikar