தீபாவளி பண்டிகைக்கு புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் வரும் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தமிழகத்தில் பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையிலும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறும் சில புதிய கட்டுப்பாடுகள் அரசு சார்பில் வழங்கப்படும். இந்த ஆண்டு பட்டாசுகள் வெடிக்க நேரக்கட்டுப்பாடு இருக்குமா? அல்லது ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாட்டில் (2 மணிநேரம் பட்டாசு வெடிக்கலாம்) மாற்றங்கள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்தது.

தீபாவளி பண்டிகை: கட்டுப்பாடுகள்

தீபாவளியையொட்டி தமிழக அரசு சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அவையாவன,

1. தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி.

2. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

இதையும் படிக்க | வங்கக் கடலில் உருவாகிறது புயல்!

3. மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை

4. அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

5. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

6. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்