புதுதில்லி: பண்டிகைக் கால நெரிசலைக் குறைக்கும் வகையில் மத்திய ரயில்வே நாடு முழுவதும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. கடந்த ஆண்டு, இதே பண்டிகைக் காலத்தில் சுமார் 4,500 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 2,800 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் கால நெரிசலை குறைக்கும் வகையில் ரயில் பயணிகளின் வசதிக்காக மத்திய ரயில்வே நாடு முழுவதும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், பண்டிகைக் காலங்களில் ரயில் பயணிகளின் நெரிசலைக் குறைக்கும் வகையிலும், பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையிலும் ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
இதையும் படிக்க |தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 பேருக்கு மத்திய அரசின் சிறப்பு விருது அறிவிப்பு
அந்த வகையில் கடந்த ஆண்டு, இதே பண்டிகைக் காலத்தில் சுமார் 4,500 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 2,800 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தில்லி ரயில்வே கோட்ட மேலாளர் சுக்விந்தர் சிங் கூறுகையில், பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களை விட கூடுதலாக 123 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.