தீபாவளி பண்டிகை: பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை

தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வந்ததால், தொடர் விடுமுறைக்காக வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தீபாவளி பண்டிகைக்காக 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான இன்று (புதன்கிழமை) பிற்பகல் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் 30-ந்தேதி (இன்று) முற்பகல் மட்டும் செயல்படும். பிற்பகல் விடுமுறை விடப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 90 மி.மீ மழை!

இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமுக்கு திருமணம்!

சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம்!