துப்பாக்கிச்சூட்டில் டிரம்ப் முழங்கும் படம் பதித்த டி-சர்ட்: சீனாவில் விற்பனை!

துப்பாக்கிச்சூட்டில் டிரம்ப் முழங்கும் படம் பதித்த டி-சர்ட்: சீனாவில் விற்பனை!டிரம்ப் துப்பாக்கியால் சுடப்பட்டபோது, அவர் முழங்கிய புகைப்படத்துடன் கூடிய டி- சர்ட்டுகள் சீனாவில் விற்பனைடிரம்ப் படம் பதித்த டி-சர்ட்டுகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துப்பாக்கியால் சுடப்பட்டபோது, அவர் முழங்கிய புகைப்படத்துடன் கூடிய டி- சர்ட்டுகள் சீனாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதோடு மட்டுமின்றி, அச்சம்பவத்தில் மேடையில் காதில் ரத்தம் வழிந்தவாறு இருந்த படம் பதித்த டி-சர்ட்டுகளையும் சீன மின்னணு வணிக நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

அமெரிக்க முன்னள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பென்ஸில்வேனியாவில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது மர்ம நபரால் சுடப்பட்டார். இச்சம்பவம் உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியானது.

டிரம்ப் தனது வலது காதில் ரத்தம் வழிந்தவாறு, தனது பாதுகாப்பு அதிகாரிகள் சூழ அழைத்துச் செல்லும்போது, வலது கையை உயர்த்தி அவர் முழங்கினார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டது.

இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த டாபா மற்றும் ஜேடி.காம் என்ற சில்லறை விற்பனை இணையதள நிறுவனங்கள் டிரம்ப் சுடப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் பதித்த டி-சர்ட்டுகளை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளன.

அவற்றில் டிரம்ப் காதில் ரத்தம் வழிந்தவாறு இருக்கும் படம், ரத்தம் வழிய பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச்செல்லும்போது முழங்கிய படம் போன்றவற்றை பதித்துள்ளது.

அவற்றுடன் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவோம். துப்பாக்கிச்சூடு மேலும் என்னை வலுப்படுத்தும் போன்ற வாசகங்கள் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

ஏபி செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த இவான் வூசி என்பவர் இப்படங்களை எடுத்துள்ளார். இதனால் ஏபி செய்தி நிறுவனம் காப்புரிமை கோர வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த ஏபி செய்தி நிறுவனத்தின் துணைத் தலைவர் லாரன் ஈஸ்டன் கூறியதாவது, அசோசியேட்டட் பிரஸ் இவான் வூசியின் புகைப்படம் குறித்து பெருமிதம் கொள்கிறது. அதன் தாக்கத்தை எங்கள் நிறுவனம் அங்கீகரிக்கிறது எனக் குறிப்பிட்டார்.

Related posts

காங்கிரஸ் மற்றும் சாதி கட்சிகளிடம் இருந்து தலித் தலைவர்கள் விலகி இருக்க வேண்டும் – மாயாவதி

இந்தியாவில் முதல்முறை; கேரளாவில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்