துருக்கியில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

இஸ்தான்புல்: கிழக்கு துருக்கியின் மாலத்யா மாகாணத்தில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சில கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று நாட்டின் பேரிடர் மற்றும் அவசரகால மேலாண்மை ஆணையமான (ஏஎஃப்ஏடி) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் போது மூன்று கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் அதில் எந்த விதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றார் உள்துறை அமைச்சரான அலி யெர்லிகாயா.

இதையும் படிக்க: விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான வழக்கில் விசாரணையைத் தொடங்கிய போலீஸார்!

சிரியாவின் ஹசாகா, டெய்ர் அல்-ஜோர் மற்றும் அலெப்போ மாகாணங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாலத்யா நகருக்கு கிழக்கே 40 கி.மீ தொலைவில் உள்ள காலே மாவட்டத்தில் காலை 10:46 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1.24) இது நிகழ்ந்ததாக (ஏஎஃப்ஏடி) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக ஆறு மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் சுமார் 190 பேர் சிகிச்சை பெற்று வருகிற நிலையில் அவர்களில் 43 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

Related posts

தூத்துக்குடி: கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி!

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்து: தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை பலத்த காயம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!