துலிப் கோப்பை: இந்தியா ‘டி’ அணி நிதான ஆட்டம்!

இந்தியா பி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா டி அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

துலிப் கோப்பை

துலிப் கோப்பையில் மொத்தமுள்ள 6 ஆட்டங்களில் 5 ஆவது ஆட்டத்தில் இந்தியா டி மற்றும் இந்தியா சி அணிகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆனந்தபூர் மைதானத்தில் விளையாடி வருகின்றன.

அதிகரிக்கும் சைபர் மோசடி! மக்களே உஷார்!

டாஸ்

முதலில் டாஸ் வென்ற இந்தியா பி அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் பவுலிங் செய்வதாக அறிவித்தார்.

சிறப்பான தொடக்கம்

அதன்படி தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய இந்தியா டி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் மற்றும் ஸ்ரீகர் பரத் இருவரும் நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர்.

தொடக்கத்தில் இருந்தே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்தனர். சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 93 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்ரீகர் பரத் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

35 ஓவர்கள் முடிவில் இந்தியா டி அணி 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் சேர்த்துள்ளது. நிசாந்த் 1 ரன்னும், ரிக்கி புய் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்தியா சி அணித் தரப்பில் முகேஷ் குமார், நவதீப் சைனி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

சதி திட்டம் கசிவு.. முன்கூட்டியே பேஜர்களை வெடிக்க வைத்த இஸ்ரேல்? வெளியான அதிர்ச்சி

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!