துலீப் கோப்பை: கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி வெற்றி

துலீப் கோப்பை தொடரில் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றுள்ளது.

அனந்தபூர்,

துலீப் கோப்பை தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணிக்கு எதிரான போட்டியில் கெய்வாட் தலைமையிலான இந்தியா சி அணி விளையாடியது. முதல் இன்னிங்ஸில் இந்தியா டி அணி 164 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டான நிலையில், இந்தியா சி அணி 168 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து 4 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா டி அணி 236 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 56 ரன்களும், ஸ்ரேயாஸ் 54 ரன்களும் சேர்த்தனர். இந்தியா சி அணி சார்பாக மனவ் சுதார் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 233 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா சி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் அடித்து இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக ஆர்யன் ஜுயல் 47 ரன்களும், கெய்க்வாட் 46 ரன்களும் அடித்தனர்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா