முஷீர் கான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
பெங்களூரு,
துலீப் கோப்பை தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா ஏ அணி, அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சுப்மன் கில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா பி 321 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முஷீர் கான் 181 ரன்கள் குவித்தார். இந்தியா ஏ அணி சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணி மிகவும் சுமாராக பேட்டிங் செய்து 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 36, கேஎல் ராகுல் 37 ரன்கள் எடுத்தனர். இந்தியா பி சார்பில் அதிகபட்சமாக நவ்தீப் ஷைனி, முகேஷ் குமார் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா பி அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 184 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 61, சர்பராஸ் கான் 46 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா ஏ சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 5 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதனையடுத்து 275 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா ஏ அணி 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் கில் தலைமையிலான இந்தியா ஏ அணியை வீழ்த்தி இந்தியா பி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா ஏ தரப்பில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் (57 ரன்கள்) அரைசதம் அடித்து போராடியும் பலனில்லை. இந்தியா பி தரப்பில் அதிகபட்சமாக யாஷ் தயாள் 3 விக்கெட்டுகளும், முகேஷ் குமார் மற்றும் சைனி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
முஷீர் கான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.