துலீப் கோப்பை: முதல் வெற்றியைப் பதிவு செய்தது ருதுராஜ் அணி!

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த வியாழக்கிழமை (செப்.5) முதல் நடைபெற்று வருகின்றன.

இதில் இந்தியா ஏ,பி,சி,டி என 4 அணிகள் விளையாடுகின்றன. ஏ அணிக்கு ஷுப்மன் கில், பி அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன், சி அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், டி அணிக்கு ஸ்ரேயாஷ் ஐயரும் கேப்டன்களாக செயல்படுகிறார்கள்.

துலீப் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் சி, டி அணிகள் மோதின.

முஷீர் கானின் வலுவான மனநிலை இந்திய அணிக்கு உதவும்!

முதல் இன்னிங்ஸில் டி அணி 164 ரன்களும் 2ஆவது இன்னிங்ஸில் 236 ரன்களும் எடுத்தன. சி அணி முதல் இன்னிங்ஸில் 168 ரன்கள் எடுத்தது.

முதல் வெற்றி

அடுத்து 2ஆவது இன்னிங்ஸில் கேப்டன் ருதுராஜ் 46, ஆர்யன் ஜுயல் 47, ரஜத் படிதார் 44 ரன்களும் எடுத்தார்கள். அபிஷேக் போரேல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் எடுத்தார்.

61 ஓவர் முடிவில் 233 ரன்கள் எடுத்து இந்திய சி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தத் தொடரின் முதல் வெற்றியை ருதுராஜின் அணி பதிவு செய்துள்ளது.

THUMPING WIN FOR INDIA C…!!!!
– Well lead by Ruturaj Gaikwad & important score in the run chase in 4th innings. ✅ pic.twitter.com/08Lr2r8pb3

— Johns. (@CricCrazyJohns) September 7, 2024

Related posts

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் மகாராஜா பட நடிகை!

ஆஸ்கருக்கு லாபதா லேடீஸ் பரிந்துரை!

லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல்: பலி 182 ஆக உயர்வு!