துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'லக்கி பாஸ்கர்' படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள திரைப்படம் 'லக்கி பாஸ்கர்'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 27-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 'சீதா ராமம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் 'லக்கி பாஸ்கர்' என்பது குறிப்பிடத்தக்கது.

Gear up to witness an extra-ordinary tale of our endearing and passionate #LuckyBaskhar in theatres from SEPTEMBER 27th! #LuckyBaskharOnSept27th@dulQuer#VenkyAtluri@gvprakash@Meenakshiioffl@vamsi84@NimishRavi@NavinNooli@Banglan16034849#SaiSoujanya@SitharaEnts… pic.twitter.com/K10dLWyGSU

— Sithara Entertainments (@SitharaEnts) May 29, 2024

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!