தூத்துக்குடியில் பலத்த மழை

தூத்துக்குடியில் புறநகர் பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது.

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றால்தான் தேர்தலில் போட்டியிட முடியும்! சந்திரபாபு நாயுடு

அதன்படி தூத்துக்குடி மாநகர பகுதியில் திங்கள்கிழமை காலையிலிருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காலை சுமார் அரை மணி நேரம் கோரம்பள்ளம், காலாங்கரை, சிப்காட், புதுக்கோட்டை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

Related posts

தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்

குஜராத்தில் 427 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

தீபாவளி: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? புகார் எண்கள்!