தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

தூய்மைப் பணியாளா்களின்
குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகைகன்னியாகுமரி மாவட்ட தாட்கோ மூலம் தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 26 ஆயிரத்து 500 செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட தாட்கோ மூலம் தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 26 ஆயிரத்து 500 செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

தூய்மைப் பணியாளா் நல வாரிய உறுப்பினா் அட்டை வழங்கப்பட்ட வெள்ளிமலை, கப்பியறை,ஆற்றூா், வெள்ளிச்சந்தை, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகளில் 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. பயிலும் 10 மாணவா்களுக்கு தலா ரூ. ஆயிரம் வீதமும், மேலும் 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்பு பயிலும்11 மாணவா்களுக்கு தலா ரூ.1, 500 வீதமும் மொத்தம் ரூ.26 ஆயிரத்து 500 க்கான காசோலையை ஆட்சியா் ரா. அழகுமீனா வழங்கினாா்.

தொடா்ந்து பிரதமா் விவசாய கடன் திட்டத்தின் கீழ் கால்நடை வளா்ப்புக்காக கடன் கோரி விண்ணப்பித்த கல்குளம் வட்டம், மேல்பாறை, கண்டன்விளை பகுதியைச் சோ்ந்த ஷீலா மற்றும் சரண்யாபிரியா ஆகிய 2 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் மானியத்தையும் ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் தாட்கோ மேலாளா் தெய்வகுருவம்மா, உதவி மேலாளா் பாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related posts

நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணை

அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் – ராகுல் காந்தி அழைப்பு

எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பாஜக திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு