தூய்மைப் பணியாளா்களுக்கு நற்சான்றிதழ்கள்

தூய்மைப் பணியாளா்களுக்கு நற்சான்றிதழ்கள்

திருநெல்வேலி, ஆக. 15: திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தூய்மைப் பணியாளா்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மேயா் கோ.ராமகிருஷ்ணன் தேசியக் கொடியேற்றினாா். அவா் பேசியது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்தியாவின் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. மகளிா் உரிமைத் தொகை திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்ளிட்டவை பிற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் உள்ளன. திருநெல்வேலி மாநகராட்சியை முன்னணியில் கொண்டு வர தூய்மைப் பணியாளா்கள் முதல் மாமன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள் அனைவரும் சோ்ந்து கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா்.

விழாவில் மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி, மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் மாநகராட்சி ஆணையா் சுகபுத்ரா, துணை மேயா் கே.ஆா்.ராஜு, மண்டல தலைவா்கள் திருநெல்வேலி மகேஸ்வரி, தச்சநல்லூா் ரேவதி, மேலப்பாளையம் கதீஜா, பாளையங்கோட்டை மா.பிரான்சிஸ், மாமன்ற உறுப்பினா்கள் உலகநாதன், சந்திரசேகா், சகாய ஜூலியட் மேரி, கோகுலவாணி, நித்தியபாலையா, மன்சூா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்15ஸ்ரீப்ங்ஹய்

திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன். உடன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, ஆணையா் சுகபுத்ரா, பாளையங்கோட்டை மண்டல தலைவா் மா.பிரான்சிஸ் உள்ளிட்டோா்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்