கவுகாத்தி,
அரியானா மாநில அரசு அலுவலகங்களில் குப்பைகளை அகற்றும் தூய்மை பணியாளர் வேலைக்கு 6,000க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள், சுமார் 40,000 இளங்கலை பட்டதாரிகள் மற்றும் 12ம் வகுப்பு வரை படித்தவர்கள் என 1.2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மாதம் 15,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் இந்த வேலைக்கு ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'மக்கள் தவறுதலாக வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. தூய்மை பணியாளர் வேலை என தெரிந்தும் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி இதுவரை துவங்கவில்லை' என அதிகாரிகள் தெரிவித்தனர். அரியானாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மையை ஆளும் மாநில பாஜக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.