தூய்மை மட்டுமே ஆரோக்கியமான, வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும்: திரௌபதி முர்மு!

தூய்மை மட்டுமே இந்தியாவை ஆரோக்கியமான வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

உஜ்ஜையினில் நடைபெற்ற சஃபாய் மித்ரா சம்மேளனத்தில் உரையாற்றிய முர்மு,

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரம் தொடர்ந்து ஏழாவது முறையாகத் தூய்மைக் கணக்கெடுப்பில் முதலிடத்தில் உள்ளதாகவும், போபால் நாட்டிலேயே தூய்மையான மாநிலத் தலைநகராக திகழ்கிறது என்றும் பாராட்டினார்.

சரும அழகுக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்!

சஃபாய் மித்ராக்களை (துப்புரவுத் தொழிலாளர்கள்) கௌரவிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தூய்மை மட்டுமே நாட்டை ஆரோக்கியமான, வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும். துப்புரவுத் தொழிலாளிகளைக் கௌரவிப்பதன் மூலம் நன்மை நாமே போற்றிக் கொள்கிறோம் என்று அவர் கூறினார்.

இந்தியா சுத்தம், ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியடைந்த நாடாக மாற மக்கள் ஒருபடி முன்னேறிச் செல்லுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் "ஸ்வச் பாரத் மிஷன்" நாடு தழுவிய இயக்கமாக மாறியுள்ளது. இதன் விளைவாக நாட்டில் விரிவான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

இந்த பேரணி மக்களிடையே தூய்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மேலும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கழிப்பறை வசதி செய்து கொடுத்ததற்காக அரசுக்கு அவர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், நான்கு பெண்கள் உள்பட ஐந்து துப்புரவுத் தொழிலாளர்களை முர்மு பாராட்டி பரிசுகளை வழங்கினார். மேலும் ரூ.1,692 கோடி செலவில் கட்டப்படவுள்ள உஜ்ஜைன்-இந்தூர் ஆறு வழிச் சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!