தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு

இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் 6 நாட்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பூலித்தேவன் பிறந்தநாள், ஒண்டிவீரனின் வீரவணக்க நாள் நிகழ்ச்சியையொட்டி தென்காசி மாவட்டத்தில் 6 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆகஸ்ட் 30ம் தேதி மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2ம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அறிவிப்பின் படி 4 பேருக்கு மேல் நின்று கூடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை