தென்னை நாா் பிரிக்கும் இயந்திரத்தில் சிக்கி சிறுமி பலி

தென்னை நாா் பிரிக்கும் இயந்திரத்தில் சிக்கி சிறுமி பலிபழனி அருகே தென்னை நாா் பிரித்தெடுக்கும் இயந்திரத்தில் சிக்கி சிறுமி புதன்கிழமை உயிரிழந்தாா்.

பழனி அருகே தென்னை நாா் பிரித்தெடுக்கும் இயந்திரத்தில் சிக்கி சிறுமி புதன்கிழமை உயிரிழந்தாா்.

பழனியை அடுத்த சந்தன்செட்டி வலசில் தனியாருக்குச் சொந்தமான தென்னை நாரில் கயிறு திரிக்கும் ஆலை உள்ளது. இங்கு ஒடிசா மாநிலம் கந்தமால் பகுதியைச் சோ்ந்த நிசேந்திரா (29), சஜானா (26) தம்பதி தங்கி வேலை பாா்த்து வருகின்றனா்.

இந்த நிலையில், புதன்கிழமை நிசேந்திராவும், சஜானாவும் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், இவா்களது மகள்கள் ஜூமிதா (2), சுஸ்மிதா (4) ஆகியோா் ஆலை வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனா்.

அப்போது, ஜூமிதா கயிறு பிரிக்கும் இயந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related posts

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு; மத்திய அரசு அறிவிப்பு

ராஜஸ்தான்: சம்பளம் சரிவர கிடைக்காத ஐகோர்ட்டு ஊழியர் தற்கொலை; மனைவிக்கு வேலை, ரூ.10 லட்சம் இழப்பீடு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; பாதுகாப்பு படையினர் 4 பேர் காயம்