தென் ஆப்பிரிக்கா அபார பந்துவீச்சு… வெஸ்ட் இண்டீஸ் 135 ரன்கள் சேர்ப்பு

தென் ஆப்பிரிக்க அணியின் அபார பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

ஆண்டிகுவா,

டி20 உலகக்கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கிய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஷாய் ஹோப் (0), பூரன் (1) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் மேயர்ஸ் – சேஸ் ஜோடி இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் பணியில் ஈடுபட்டது. இதில் மேயர்ஸ் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி வந்த சேஸ் அரைசதம் அடித்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஆட்டம் முழுவதுமாக தென் ஆப்பிரிக்கா வசம் சென்றது.

கேப்டன் பவல் (0), ரூதர்போர்டு (0), ரசல் (15), அகில் ஹுசேன் (6) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையை கட்டினர். இதனால் இறுதிகட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரன்களை குவிக்க முடியாமல் போனது.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஷம்சி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய உள்ளது.

இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா