தென் மாவட்டங்களில் சாதிய பிரச்சினைகள் வராமல் தடுக்கப்படும் – தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த்

மதுரை,

தென் மண்டல காவல்துறை ஐ.ஜி.யாக பணிபுரிந்த என்.கண்ணன் சென்னைக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக புதிய தென் மண்டல ஐ.ஜி.யாக பிரேம் ஆனந்த் சின்கா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று மதுரையிலுள்ள அலுவலகத்தில் ஐ.ஜி.யாக பிரேம் ஆனந்த் சின்கா பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஐ.ஜி. பிரேம் ஆனந்த் கூறியதாவது:-

தென் மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு, சாதிய பிரச்சினைகளை வராமல் தடுக்கப்படும். பழிக்குப்பழி கொலைகள் நடக்காமல் இருக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தடுக்க பழைய நடவடிக்கை தொடரும். இது தொடர்பான நிலுவை வழக்குகளை துரிதப்படுத்தி சம்பந்தப்பட்டோருக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும்.

நகர் புறம், கிராமங்களில் வழிப்பறி, திருட்டு, கொலை போன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும். காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வருவோரை இன்முகத்துடன் வரவேற்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் காவல் நிலைய வரவேற்பாளர்கள் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படும். தென் மாவட்டத்திலுள்ள ரவுடிகள் குறித்த தகவல்கள் உள்ளன. இதன்மூலம் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி; சித்தராமையா பதவி விலகலா…? டி.கே. சிவக்குமார் பதில்

6 வயது சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்த தலைமை ஆசிரியர் கைது

திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் ? தேவஸ்தானம் மறுப்பு