தேசிய அளவில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதம் எவ்வளவு?

லோக் சபா தேர்தல் முடிவுகள் 2024 : தேசிய அளவில் கட்சிகள் வாரியாக வாக்கு சதவிகிதம் எவ்வளவு?

vote share

மக்களவைத் தேர்தலில் இந்திய அளவில் அதிகபட்சமாக பாஜக 36.56 சதவிகித வாக்குகள் பெற்று பெரும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் அடுத்தடுத்து இடங்களில் உள்ளன.

மக்களவைத் தேர்தலில் நாடு தழுவிய அளவில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதங்களை இந்திய தேர்தல் ஆணையம் பகிர்ந்துள்ளது. இதன்படி அதிகபட்சமாக பாஜக 36.56 சதவிகித வாக்குகள் பெற்று பெரும் கட்சியாக உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 21.19 சதவிகித வாக்குகளும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 4.58 சதவிகித வாக்குகள் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

விளம்பரம்

மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி 4.37 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளன.

ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 2.06 சதவிகித வாக்குகளும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 1.98 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளன.

திமுக 1.82 சதவிகித வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1.76 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளன.

லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 1.57 சதவிகித வாக்குகளும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி 1.48 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளன.

இதையும் படிங்க : லோக் சபா தேர்தல் முடிவுகள்; தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவிகிதம்? – முழு விவரம் இதோவிளம்பரம்

நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் 1.46 சதவிகித வாக்குகளும், அதிமுக 1.39 சதவிகித வாக்குளும் வாங்கியுள்ளன.

நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 1.25 சதவிகித வாக்குகளும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவு 1.15 சதவிகித வாக்குளும் பெற்றுள்ளன.

ஆம் ஆத்மி கட்சி 1.11 சதவிகித வாக்குகள் பெற்றுள்ள நிலையில், நோட்டா 0.99 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
ADMK
,
BJP
,
Congress
,
CPI
,
CPM
,
DMK
,
Lok Sabha Election 2024
,
Lok Sabha Election Results 2024
,
ntk

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று

ரூ.158 கோடியில் தொழில்நுட்ப கட்டிடம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்