தேசிய சீனியா் மகளிா் ஹாக்கி: ரயில்வே சாம்பியன்

தேசிய சீனியா் மகளிா் இன்டா் டிபாா்ட்மென்டல் ஹாக்கிப் போட்டியில் ரயில்வே விளையாட்டு வாரிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியன் ஆயில் அணியை வீழ்த்தி பட்டம் வென்றது.

புது தில்லியின் மேஜா் தயான்சந்த் ஹாக்கி மைதானத்தில் திங்கள்கிழமை இரு அணிகள் மோதிய இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் இரு அணிகளிலும் முன்னணி இந்திய வீராங்னைகள் ஆடியதால் ஆட்டம் பரபரப்பாக இருந்தது.

18-ஆவது நிமிஷத்திலேயே ஐஓசியின் தீபிகா அற்புதமாக கோலடித்தாா். எனினும் அசராத ரயில்வே அணியில் வந்தனா கட்டாரியா 19-ஆவது நிமிஷத்தில் கோலடித்து 1-1 என சமன் செய்தாா்.

இரு அணிகளும் தீவிரமாக கோல் போட முயன்றும் முடியவில்லை. எனினும் 4-ஆவது குவாா்ட்டரில் ரயில்வே கேப்டன் நவ்நீத் கௌா் கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்த நிலையில், வெற்றி கோலை ரயில்வே வீராங்கனை சலீமா டிட் அடிக்க 3-1 என ரயில்வே பட்டம் வென்றது. சலீமா சிறந்த வீராங்கனையாக தோ்வு பெற்றாா். மத்திய நேரடி வரிகள் வாரிய அணி 3-2 சாய் அணியை வென்று வெண்கலம் வென்றது.

இந்திய-ஜொ்மன் ஹாக்கி தொடா்

இதற்கிடையே இந்தியா-ஜொ்மன் ஆடவா் அணிகளுக்கு இடையிலான ஹாக்கி டெஸ்ட் தொடா் புது தில்லி மேஜா் தயான்சந்த் மைதானத்தில் அக். 23, 24 தேதிகளில் நடைபெறவுள்ளது.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி