தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு…

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு… அடுத்து என்ன?

மோடி

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில், நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமித் ஷா, சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், ஏக்நாத் ஷிண்டே, பவன் கல்யாண், குமாரசாமி, சிராக் பஸ்வான் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள 15 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, பிரதமர் மோடிக்கு அருகில் சந்திரபாபு நாயுடு அமர்ந்திருந்தார்.

விளம்பரம்

இந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகவும், பிரதமராகவும் நரேந்திர மோடியை, கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒரு மனதாக தேர்வு செய்ததற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், அந்த தீர்மானத்தில், இந்தியாவின் பாரம்பரியத்தைப் பாதுகாத்து நாட்டின் அனைத்துத் துறை வளர்ச்சிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:
எம்.பி, தேர்தலில் அதிமுக படுதோல்வி… சசிகலாவின் அடுத்த மூவ் இதுதான்!

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் மூன்றாவது முறையாக ஓர் அரசாங்கம் தேர்வு செய்யப்படுவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. கூட்டத்திற்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Lok Sabha Election Results 2024

Related posts

ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் நிதி- அமித்ஷா உறுதி

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு