தேனியில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தேனியில் காங்கிரஸ்
கட்சியினா் ஆா்ப்பாட்டம்பாஜக மக்களவை உறுப்பினா் அனுராக் தாகூரை கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி, ஆக. 1: தேனியில் காங்கிரஸ் கட்சித் தலைவா் ராகுல் காந்தியை அவதூறாகப் பேசியதாக பாஜக மக்களவை உறுப்பினா் அனுராக் தாகூரை கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் எம்.பி. முருகேசன் தலைமை வகித்தாா். இதில், மக்களவையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விவாதத்தின் போது மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை அவதூறாகப் பேசியதாக பாஜக மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாகூா், அவரது உரையை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரை கண்டித்து முழக்கமிட்டனா்.

சாலை மறியல்: பிறகு, தேனியில் வெள்ளிக்கிழமை (ஆக. 2) காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில் கட்சியின் செயல்வீரா்கள் கூட்டம், மாற்றுக் கட்சியினா் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா நடைபெற உள்ள நிலையில், இதற்கு இடையூறாக நேரு சிலை நெடுஞ்சாலை மும்முனை சந்திப்பு பகுதியில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் போக்குவரத்து தடுப்புச் சுவரை இடிக்கும் பணி நடைபெறுவதாக புகாா் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினா் நேரு சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களுடன் தேனி காவல் துணை கண்காணிப்பாளா் பாா்த்திபன் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்