தேமுதிக அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா தவெக மாநாடு? விஜய பிரபாகரன் பதில்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம்(தவெக) என்ற பெயரில் தொடங்கியுள்ள அரசியல் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தவெக மாநாடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு தேமுதிக தலைவர் விஜய பிரபாகரன் பதில் அளித்துள்ளார்.

விஜய பிரபாகரன்

இது குறித்து செய்தியாளர்கல் எழுப்பிய கேள்விக்கு திங்கள்கிழமை(செப். 9) விஜய பிரபாகரன் கூறியதாவது, “மதுரையில் 2005-இல் கேப்டன்(விஜயகாந்த்) நடத்திய மாநாட்டுக்கு பிறகு, பிறர் நடத்திய, நடத்துகிற மாநாடு எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரியவில்லை.

விஜய் அண்ணா மாநாட்டை நடத்திய பிறகு அதைப் பற்றி கேளுங்கள். அப்போது அதற்கு பதிலளிப்பதே சரியாக இருக்கும்.”

“மதுரையில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் குறைந்தபட்சம் 35 லட்சம் பேர் திரண்டிருந்தனர். தொண்டர்கள் கேப்டனுக்காக தமிழ்நாடு முழுவதும் பல நூறு கி.மீ. தூரத்துக்கு பேனர்கள் வைத்திருந்தனர். மாநாட்டுக்கு வருகை தந்திருந்த 35 லட்சம் பேருக்கும் கேப்டன் உணவு வழங்கியிருந்தார். அதுமட்டுமல்லாமல் 35 லட்சம் பேரும் பத்திரமாக தங்கள் வீடுகளுக்குச் சென்று சேர்ந்தனர். இந்த மாதிரி வரலாறு மிக்கதொரு மாநாட்டை தேமுதிக 2005-இல் நடத்தியுள்ளது.

இந்த நிலையில், தேமுதிகவுக்கு இணையாக விஜய் அண்ணாவால் மாநாட்டை நடத்த முடியுமா? என்பது, அவர் மாநாட்டை நடத்திய பிறகே தெரியும். ஆகவே, சகோதரர் விஜய் அண்ணனுக்கும், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களுக்கும் தேமுதிக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசியுள்ளார்.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்