தேமுதிக 20-ம் ஆண்டு விழா: அரியலூரில் கட்சிக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி உற்சாகம்

தேமுதிக 20-ம் ஆண்டு விழா: அரியலூரில் கட்சிக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி உற்சாகம்

அரியலூர்: தேமுதிக 20-ம் ஆண்டு தொடக்கம், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா மற்றும் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கியதை கொண்டாடும் விதமாக, தேமுதிகவினர் இன்று (செப்.14) அரியலூர் எம்ஜிஆர் சிலை அருகே கொடி ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு தேமுதிக மாவட்டச் செயலாளர் இராம.ஜெயவேல் தலைமை வகித்தார். இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான கு.நல்லத்தம்பி, தேமுதிக கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, பெண்களுக்கு புடவைகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் சக்திவேல், நகரச் செயலாளர் தாமஸ் ஏசுதாஸ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, செந்துறை ரவுண்டானா, கொல்லாபுரம், முல்லையூர், ஜெயங்கொண்டம், வடுகபாளையம், பூவாணிப்பட்டு, கீழநெடுவாய், ஆண்மடம், கூவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்சிக்கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை தேமுதிகவினர் வழங்கினர்.

Related posts

“தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்..” – குவாட் உச்சி மாநாடு குறித்து பிரதமர் மோடி பதிவு

சென்னையில் அதிகரிக்கும் சுவாசப்பாதை தொற்றுகள்!

கழுத்தறுத்து முதியவா் கொலை: மகன் உள்பட மூவா் கைது