தைவானில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.3 ஆக பதிவு

நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில் கட்டிடங்கள் குலுங்கின.

தைபே,

தைவான் நாட்டில் 6.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது நாட்டின் கிழக்கு நகரமான ஹுவாலினில் இருந்து 34 கிமீ தொலைவில், 9.7 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்