தொடங்கியது தவெக மாநாடு!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, கட்சியின் கொடிப் பாடலுடன் தொடங்கியது. சற்று நேரத்தில் மேடைக்கு விஜய் வருகைத்தரவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மேடையில் இருந்தவாறு தொண்டர்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் வைத்து வருகிறார்.

தொண்டர்களுக்காக விஜய்யின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான தொண்டர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

மாநாட்டிற்கு விஜய்யின் பெற்றோர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர் – ஷோபா வருகை புரிந்துள்ளனர்.

மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி