தொடரும் கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் – தமிழக மீனவர்கள் காயம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

நாகப்பட்டினம்,

வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், ரூ.4 லட்சம் மதிப்புள்ள வலைகள், ஜி.பி.எஸ். கருவி போன்றவற்றை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இரும்புக் கம்பி உள்ளிட்டவற்றால் தாக்கப்பட்டதில் காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள், இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தான் தற்போது கோடியக்கரை அருகே மீன்பிடித்த மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி