தொடரை முழுமையாக வென்று வரலாறு படைக்கும் முனைப்பில் ஆப்கன்! டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஷார்ஜாவில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாஹிடி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 106 ரன்களுக்குள் சுருட்டி ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

2ஆவது ஒருநாள் போட்டியிலும் 177 ரன்கள் வித்தியாத்தில் வென்ற ஆப்கனிஸ்தான் அணி, முதலில் பேட்டிங் செய்து 311 ரன்கள் குவித்தது. குர்பாஸ் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 105 ரன்கள் எடுத்தார். அஜ்மதுல்லா 86 ரன்களும், ரஹ்மத் 50 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்க அணி 34.2 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளது ஆப்கானிஸ்தான் அணி இந்தப் போட்டியிலும் வென்று 3-0 என்ற கணக்கில் வென்று வரலாறு படைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி

ரகுமானுல்லா, ரியாஸ், ரஹமத் ஷா, ஹஸ்மத்துல்லா (கேப்டன்), இக்ரம், ஒமர்ஜாய், முகமது நபி, ரஷித் கான், அல்லா கசான்பர், ஃபஸல்லா ஃபரூக்கி, கரோட்டே

தென்னாப்பிரிக்கா அணி

டோனி, ஹென்ட்ரிக்ஸ், பவுமா(கேப்டன்), மார்க்ரம், ஸ்டப்ஸ், கைல், வியான் முல்டர், ஜொர்ன் ஃபோர்டின், பர்கர், பீட்டர், லுன்கி இங்கிடி

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!