தொடர்ந்து உயரும் தங்கம் விலை… ஒரு கிராம் 7 ஆயிரத்தை தாண்டியது

ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று ரூ.480 உயர்ந்துள்ளது.

சென்னை,

கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த தங்கம் விலை, அதே மாதம் 22-ந்தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக அதன் விலை அன்றைய தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. அதன் தொடர்ச்சியாக விலை குறைந்து கொண்டே வந்து ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.

இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஆனால் இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. கடந்த மாதம் இறுதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை உயர ஆரம்பித்து இருக்கிறது. அதிலும் கடந்த 10 நாட்களாக தாறுமாறாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த 13-ந்தேதி ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.960 அதிகரித்தது. நேற்றைய தினம் சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.56,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்து 7 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,060-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று ரூ.480 உயர்ந்து ரூ.56,480-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

Mumbai Rains: Heavy Downpour Causes Severe Disruptions In Local Train Services, Stranding Commuters Amid Waterlogging; Visuals Surface

Won’t Bow To Bajarbunge’: Uddhav Thackeray’s Fiery Attack On Amit Shah’s Maharashtra Visit

Mumbai: Activist Calls For Action Against Schools Not Following New Safety Guidelines