தொடர் சிகிச்சையில் சீதாராம் யெச்சூரி

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சீதாராம் யெச்சூரி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக அக்கட்சி சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நெஞ்சக நோய்த் தொற்று காரணமாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டாா்.

போர்த்துகல்: ஹெலிகாப்டர் விபத்தில் 4 வீரர்கள் பலி, ஒருவர் மாயம்

இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது நோயின் தன்மை பற்றி மருத்துவமனை எதுவும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் சீதாராம் யெச்சூரி, மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அவர் சுவாச நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் உள்ளார்," என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீதாராம் யெச்சூரிக்கு அண்மையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!