தொடர் விடுமுறை: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்க தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து அக்.9 ஆம் தேதி 225 பேருந்துகளும், 10 ஆம் தேதி 880 பேருந்துகளும் கூடுதலாக இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு அக்.9 ஆம் தேதி (புதன்கிழமை) 225 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதனையடுத்து அக்.10ம் தேதி (வியாழக்கிழமை) அன்று 880 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, ஆகிய இடங்களுக்கு அக்.9 ஆம் தேதி 35 பேருந்துகளும் அக்.10 ஆம் தேதி 265 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூரு, திருப்பூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரத்திலிருந்து அக்.9 மற்றும் 10 ஆகிய நாட்களுக்கு 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

‘Apologising Does Not Diminish A Person’s Status,’ Says BJP Leader Harnath Singh Yadav While Advising Salman Khan To Resolve Blackbuck Issue

JSW Energy Signs PPA For 700 MW ISTS/STU-Connected Solar Capacity With NTPC

Toyota Unveils Limited Festival Edition of Urban Cruiser Hyryder in India