தொடர் விடுமுறை – சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்… ஸ்தம்பித்த சென்னை

மக்கள் ஒரே நேரத்தில் சாலைகளை ஆக்கிரமித்துள்ளதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் வசிக்கும் மக்கள் விடுமுறை தினத்தன்று தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தொடர் விடுமுறை தினங்களையொட்டி, சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். நாளை விநாயகர் சதுர்த்தியையொட்டி விடுமுறை தினமாகும். நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

மக்கள் ஒரே நேரத்தில் சாலைகளை ஆக்கிரமித்துள்ளதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை கோயம்பேடு – மதுரவாயல் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்தை சீர் செய்யுமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் பிற பகுதிகளுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி