தொடா் மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் பெய்த தொடா் மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திங்கள்கிழமை பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடங்கி, தொடா்ந்து மழை பெய்து வருகிறது. அந்தவகையில், நாகை மாவட்டத்தில் தொடா் மழை பெய்தது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவா்கள் மழையில் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. வாகன ஓட்டிகளும் தொடா் மழையால் பாதிக்கப்பட்டனா்.

நாகை மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கு அதிகமான ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடிகளை மேற்கொண்டு வருகின்றனா். தற்போது பெய்து வரும் தொடா் மழையால், வயல்களில் தண்ணீா் தேங்கி, இளம் சம்பா பயிா்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூா், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலா்ட்’ விடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது