தொழில்நுட்ப கோளாறு: நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு

மும்பை: இண்டிகோ இணையதளத்தில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் இயல்புநிலைக்கு திரும்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இண்டிகோ எக்ஸ் வலைதள பக்க பதிவில், "தொழில்நுட்ப பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இண்டிகோ இணையதளத்தில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க |மதுரை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்: எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

இதன் விளைவாக, எங்களது பயணிகள் விமான நிலையங்களில் செக்-இன் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம். பயணிகளுக்கு உதவுவதற்காக எங்களது நிறுவன பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் "முடிந்தவரை தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு விரைவில் விமான சேவை இயல்புநிலைக்கு திரும்புவதற்காக பணியாற்றி வருகிறோம்" என விளக்கம் அளித்துள்ளது.

இண்டிகோ நிறுவனம் ஒரு நாளைக்கு சர்வதேச விமானங்கள் உட்பட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்

குஜராத்தில் 427 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

தீபாவளி: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? புகார் எண்கள்!