தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்
சென்னை ,
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது . இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
தீபங்களின் ஒளி வெள்ளத்தில் காரிருள் விலகி, நல்விடியல் பிறக்கட்டும். அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பு, அமைதி, செல்வம் நிலைத்து நீடித்திருக்கட்டும். தீபாவளி திருநாளைப் பாதுகாப்பாகக் கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.