நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு ராகுல்காந்திதான் காரணம்- விஜயதரணி

நடிகர் விஜய் தற்போது கட்சி தொடங்கி உள்ளதற்கு காரணமே எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திதான் என்று விஜயதரணி கூறியுள்ளார்.

சென்னை

சென்னையில் விஜயதரணி நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக சட்டசபையில் காங்கிரஸ் முதன்மை கொறடா, அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் என பதவிகளை துறந்து, பா.ஜனதாவில் சேர்ந்தேன். அந்தநேரம், நாடாளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருந்தது.

அதனால், நிச்சயம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருக்கும் என்று கூறப்பட்டது. முதல் வேட்பாளர்கள் பட்டியலில் என் பெயர் வந்தது. ஆனால், மூத்த தலைவர் ஒருவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். அவருக்காக நான் தேர்தல் பணியாற்றினேன். ஆனால், கடந்த தேர்தலைவிட 60 ஆயிரம் வாக்குகள் குறைவாகவே பதிவானது. நடிகர் விஜய் தற்போது கட்சி தொடங்கி உள்ளதற்கு காரணமே எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திதான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நடிகர் விஜய் ராகுல் காந்தியை சந்தித்தபோது, காங்கிரசில் ஒரு பதவி மட்டும்தான் கேட்டார். ஆனால், ராகுல்காந்தி, 'தமிழகத்தில் நீங்கள் பெரிய நட்சத்திரம். அதனால், நீங்கள் தனி கட்சி தொடங்கியே பணியாற்றலாம்' என்றார். அதன் பிரதிபலிப்புதான் விஜய் கட்சி" இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பணி அழுத்தமா? அலுவலக நாற்காலியிலிருந்து விழுந்து லக்னௌ பெண் மரணம்!

ஜம்மு-காஷ்மீரை பயங்கரவாதம், ஊழலில் இருந்து விடுவிக்க வாக்களியுங்கள்: அமித் ஷா!

பத்லாபூர் சம்பவம்: குற்றவாளியின் தலையில் பாய்ந்த துப்பாக்கித் தோட்டா