நடிகையைத் துன்புறுத்திய வழக்கில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடைநீக்கம்!

மும்பையைச் சேர்ந்த நடிகையும் மாடலுமான காதம்பரி ஜெத்வானியை முறையான விசாரணை ஏதுமின்றி கைது செய்து துன்புறுத்தியதாகக் கூறி ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரை ஆந்திரப் பிரதேச அரசு இன்று இடைநீக்கம் செய்துள்ளது.

முன்னாள் உளவுத்துறை தலைவர் பி. சீதாராம ஆஞ்சநேயலு (டிஜி ரேங்க்) , முன்னாள் விஜயவாடா போலீஸ் கமிஷனர் கந்தி ராணா டாடா (ஐஜி ரேங்க்), முன்னாள் துணை போலீஸ் கமிஷனர் விஷால் குன்னி (எஸ்பி ரேங்க்) ஆகியோர் மாடல் நடிகை காதம்பரி ஜெத்வானியைத் துன்புறுத்தியதாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முந்தைய ஆட்சியின் போது, மும்பையில் உள்ள ஒரு பெரிய தனியார் நிறுவனத்தின் உரிமையாளருக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை திரும்பப் பெறவில்லை என்றால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று காவல்துறை அதிகாரிகள் மிரட்டியதாக காதம்பரி ஜெத்வானி குற்றம் சாட்டியிருந்தார்.

நடிகையும் மாடலுமான காதம்பரி ஜெத்வானி

இதனைத் தொடர்ந்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவரின் புகாரின் அடிப்படையில் காதம்பரி கைது செய்யப்பட்டார்.

அப்போது உளவுத்துறைத் தலைவராக இருந்த சீதாராம ஆஞ்சநேயலு எந்தக் குற்றச்சாட்டையும் பதிவு செய்யாமல் காதம்பரி ஜெத்வானியைக் கைது செய்யுமாறு மற்ற இரு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அரசு உத்தரவில் குறிப்பிட்டுள்ளபடி, கடந்த பிப்ரவரி 2, காலை 6.30 மணியளவில் நடிகை காதம்பரி மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவரைக் கைது செய்யுமாறு கந்தி ராணா டாடா மற்றும் விஷால் குன்னி ஆகியோருக்கு உத்தரவிட்டது அதற்கு இரு நாள்களுக்கு முன்பு (ஜனவரி 31) என்று தெரிய வந்துள்ளது.

முதல்வர் பதவியிலிருந்து ராஜிநாமா! -அரவிந்த் கேஜரிவால் அறிவிப்பு

சில வாரங்களுக்கு முன்பு, சில போலீஸ் அதிகாரிகள் தன் மீது பொய்யான வழக்குப்பதிவு செய்து தன்னை துன்புறுத்தியதாக மாடல் நடிகை காதம்பரி ஜெத்வானி புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரை வைத்து, மாநில அரசு இரு அதிகாரிகளை முன்பு இடைநீக்கம் செய்திருந்தது.

தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மூன்று அதிகாரிகளும், பதவியில் இல்லாமல் தினமும் இருமுறை டிஜிபி அலுவலகத்தில் தங்கள் வருகையைப் பதிவு செய்யவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளனர்.

தள்ளுபடி காரணமாக கார், பைக் மற்றும் மின்னணு சாதனங்களின் விற்பனை அதிகரிப்பு!

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, முன்னதாக ஆட்சி செய்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு தனது பொதுச் செயலாளர் நாரா லோகேஷின் தொலைபேசியை பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி ஒட்டுக் கேட்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், அதற்கு ஆஞ்சநேயலு உதவியதாகவும் தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழகத்தில் 26-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு

நாகை: வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு