நடிகை கங்கனா ரணாவத் கன்னத்தில் அறைவிட்ட CISF வீரர்? – விமான நிலையத்தில் நடந்தது என்ன?
கங்கனா ரனாவத் – குல்விந்தர் கவுர்
விமான நிலையத்தில் நடிகை கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் சிஐஎஸ்எஃப் வீரர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர் விமான நிலையத்துக்கு இன்று நடிகை கங்கனா ரணாவத் வந்தார். அப்போது அங்கிருந்த துணை ராணுவமான மத்திய தொழில் பாதுகாப்பு (CISF) பெண் வீரர் ஒருவருக்கும், நடிகை கங்கனாவிற்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியதில் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அந்த வீரர் அறைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலம் சண்டிகர் விமான நிலையத்தில் இன்று மதியம் சுமார் 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளிவராத நிலையில், நம்பத் தகுந்த வட்டாரங்கள் இந்த தகவலை அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
விளம்பரம்
இதையும் படிங்க : தருமபுரியில் சௌமியா அன்புமணிக்கு செக் வைத்த அரூர் தொகுதி… வெற்றி வாய்ப்பை இழந்தது இப்படித்தான்!
கங்கனா ரனாவத் – துணை ராணுவ வீரர் இடையிலான மோதல் குறித்த தகவல்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விரைவில் கங்கனா ரனாவத் தரப்பினர் இதுபற்றி விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தன்னை பெண் சி.ஐ.எஸ்.எஃப். காவலர் தாக்கியதாக கங்கனா ரணாவத் வீடியோ பதிவில் கூறியுள்ளார். பெண் காவலர் தன்னை தாக்கி, தகாத வார்த்தையால் பேசியதாக கூறியுள்ள கங்கனா ரனாவத், இதற்கான காரணத்தை கேட்டபோது, அவர் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறேன் என பதில் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
விளம்பரம்
மேலும் பஞ்சாபில் இத்தகைய தீவிரவாத போக்கு அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாகவும் கங்கனா ரணாவத் வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
இதற்கிடையே கங்கனா ரனாவத்தை தாக்கியது சிஐஎஸ்எஃப் துணை ராணுவத்தை சேர்ந்த குல்விந்தர் கவுர் என தெரியவந்துள்ளது. பாஜக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா ரணாவத் கூறியதால் அவரை குல்விந்தர் கவுர் தாக்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
BJP
,
BJP MP
,
Kangana Ranaut