நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை!

நடிகை தமன்னா பாட்டியாவிடம் அமலாக்கத்துறை வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.

சட்டவிரோத ஐபிஎல் சூதாட்ட விளம்பரங்களுடன் தொடர்புடைய சூதாட்ட செயலிக்கான விளம்பரத்தில் நடித்தாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக, நடிகை தமன்னாவுக்கு, அஸ்ஸாமின் குவாஹாட்டியில் உள்ள அமலாக்க இயக்குநரகம் வியாழக்கிழமை சம்மன் அனுப்பியது.

இந்தச் செயலியை விளம்பரப்படுத்துவதற்காக இன்னும் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமலாக்கத்துறையின் முன் ஆஜராவதற்காக அவர் தனது தாயுடன் குவாஹாட்டிக்குச் சென்றார்.

இதையும் படிக்க..: இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டாரா?

தமன்னா பாட்டியா, அவரது பெற்றோருடன் பிற்பகல் 1:25 மணியளவில் அமலாக்கத்துறை இயக்குநகர அலுவலகத்திற்கு வந்தார்.

ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் விசாரணை குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இதையும் படிக்க..: ஓர் ஆபாச விடியோவின் விலை ரூ. 20,000: 17 வயது சிறுவன் கைது!

Related posts

தூத்துக்குடி: கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி!

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்து: தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை பலத்த காயம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!