நடுரோட்டில் திடீர் பணமழை… லைக்ஸ் அள்ள யூடியூபர்கள் செய்த காரியம்

நடுரோட்டில் திடீர் பணமழை… லைக்ஸ் அள்ள யூடியூபர்கள் செய்த வித்தியாசமான வீடியோ!

தெலுங்கானா யூடியூபர்

தெலங்கானாவில் யூடியூப் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், நடுரோட்டில் பணமழை பொழிந்த யூடியூபர்கள் இருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் மகாதேவ். இவர், “its_me_power,” என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பிரபமாகி வருகிறார். பவர் ஹர்ஷா என்று கூறப்படும் மகாதேவ், தனது youtube சேனலை பிரபரப்படுத்தவும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக லைக்ஸ் வாங்கவும் அவ்வப்போது விநோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், லைக் மோகத்திலும் தனது நண்பருடன் சேர்ந்து ஐதராபாத்தில் பல இடங்களில் பண மழை பொழிந்துள்ளார்.

விளம்பரம்

கூக்கட்பள்ளி சாலையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தன்னுடைய நண்பருடன் பைக்கில் பறந்தபடி, பணத்தை காற்றில் பறக்கவிட்டுள்ளார். திடீரென கத்தை கத்தையாக பணத்தை வீசி, பணமழை பொழிந்ததை கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் போட்டி போட்டு அள்ளினர்.

நீ கிட்ட வந்து நின்னா.. ஹார்ட் பீட்டே ஸ்பீட் ஆகுது.. பிங்க் நிற உடையில் நடிகை கீர்த்தி ஷெட்டி.!
மேலும் செய்திகள்…

இதேபோன்று, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியிலும், நடு ரோட்டில் நடந்து கொண்டே 100 ரூபாய் நோட்டுகளை விண்ணை நோக்கி மகாதேவ் வீசியுள்ளார். வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்த்த நிலையில், பாதசாரிகள் கிடைத்த வரை லாபம் என்ற நோக்கில் போட்டி போட்டு அள்ளிச் சென்றனர். தான் வாரி இறைத்த பணம் எவ்வளவு என்பதை சரியாக கூறும் நபருக்கு தன்னுடைய அடுத்த வீடியோவில் உரிய பரிசை அறிவிப்பேன் என்றும் பவர் ஹர்ஷா தெரிவித்துள்ளார்.

விளம்பரம்இதையும் படிங்க: TNPSC தேர்வு முடிவுகள் குறித்து வெளியான அப்டேட்… புதிய தலைவராக பொறுப்பேற்ற பிரபாகர் பேட்டி!

இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளுவதற்காக இளசுகள் பலரும், பைக் ரேஸ், பைக் வீலிங் சாகசம் செய்வதுடன், உற்சாக நடன வீடியோவையும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், லைக்ஸ் மோகத்தில் நடு ரோட்டில் பண மழை பொழிந்த இளைஞர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இந்த இளைஞர்களின் இம்சையால் சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Crime News
,
youtube
,
youtube viewers
,
youtuber

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்