நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கு – சென்னை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவு

சென்னை,

சென்னை கே.கே. நகர், அசோக் நகர், வேளச்சேரி மெயின் ரோடு உள்ளிட்ட சில பகுதிகளில், நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரி சென்னை ஐகோர்ட்டில் வாராகி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர், சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related posts

சமூகவலைதளம் மூலம் பழக்கம்: 16 வயது மாணவியை சீரழித்த 4 பேர் கைது

சித்தராமையா மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல்

நேற்றிரவு… ஹிமான்ஷி குரானா!