நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி : நேபாளம் பிரதமர் பிரசண்டா அரசு தப்பியது

காத்மாண்டு: நேபாளில் பிரதமர் புஷ்பகமல் பிரசண்டா தலைமையிலான கூட்டணி அரசு மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து அவரது பதவி தப்பியது.

நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, பிரதமராக புஷ்ப கமல் தாஹல் பிரசண்டா, 2022ம் ஆண்டு டிச., 25ல் பதவியேற்றார்.

இக்கூட்டணியில் நேபாள கம்யூனிஸ்ட் திடீர் விலகியது. இதையடுத்து நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் பிரசண்டா நீடித்தார். பின்னர் திடீரென நேபாள காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டு மீண்டும் நேபாள கம்யூ. கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்து வருகிறார்.

கடந்த மார்ச் மாதம் பிரசண்டா அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதில் பிரசண்டா கூட்டணி பெரும்பான்மை பெற்றதால் ஆட்சி தப்பியது.

தற்போதைய ஆளும் கூட்டணியில் முக்கிய கட்சியான ஜே.எஸ்.பி. -என் ) எனப்படும் ஜனதா சமாஜ்பாடி – (நேபாளம்) கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இக்கட்சி தலைவரான உபேந்திரா யாதவ் தலைமை மீது அதிருப்தியாளர்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் பிரதமர் பிரசாண்டா பதவி தப்புமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் நேபாளம் பார்லிமென்டில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 275 உறுப்பினர்களில் சி.பி.என். மாவோயிஸ்டு தலைமையிலான கூட்டணி கட்சிக்கு 157 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து. பெரும்பான்மைக்கு 138 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் 157 உறுப்பினர்களுடன் பெரும்பான்மை பெற்றதால் பிரசண்டா அரசு தப்பியது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்