நல்லவனாக இருந்தால் பிழைக்க முடியாது: ரஜினி

வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு கவனம் ஈர்த்துள்ளது.

ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா தயாரித்த இப்படம் வருகிற அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், நேற்று (செப். 20) சென்னையில் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், நடிகர்கள் ரஜினிகாந்த், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா, ரித்திகா சிங் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்வில், வேட்டையன் படத்தின் முன்னோட்ட விடியோவும் வெளியிடப்பட்டது.

குட் பேட் அக்லியில் அர்ஜுன் தாஸ்?

நிகழ்வில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “என் மகள் சௌந்தர்யா மூலமாக இயக்குநர் த. செ. ஞானவேலிடம் நல்ல கதை இருப்பதை அறிந்தேன். தொடர்ந்து, அவரை அழைத்துப் பேசினேன். அவரிடம் கருத்துள்ள கதையாக இருக்கும் என்பதால், எனக்கு அது சரியாக இருக்காது என கமர்சியல் கதை இருந்தால் சொல்லுங்கள் என்றேன். 10 நாள்கள் நேரம் கேட்டு பின் இரண்டு நாள்களில் கருத்துள்ள கமர்சியல் கதையுடன் வந்தார்.

லோகேஷ் கனகராஜ், நெல்சன் காட்டிய ரஜினியைக் காட்டாமல் இன்னொரு கோணத்தில் காட்டுகிறேன் என்றார். நான் சரி என ஒப்புக்கொண்டேன். ஒரு மாஸ் படம் வெற்றி பெற நல்ல இயக்குநரும் தயாரிப்பாளரும் முக்கியம்.

பல இயக்குநர்கள் ஹிந்தியில் என்னையும் அமிதாப் பச்சனையும் சேர்த்து நடிக்க வைக்க முயன்றார்கள். ஆனால், நாங்கள் இருவரும் ஒப்புக்கொள்ளவில்லை. அமிதாப் பச்சன் இந்தப் படத்தில் என்னுடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் எப்போதும் என் முன்மாதிரி. ஃபஹத் ஃபாசில் போன்ற எதார்த்த நடிகரைப் பார்த்ததில்லை. ஒரு அசாத்திய நடிகர். அனிருத் என் மகன் போன்றவர். அவர் இப்படத்தில் இருக்க வேண்டும் என 100 சதவீதம் ஞானவேல் விரும்பினார். ஆனால், நான் 1000 சதவீதம் விரும்பினேன்.

என்கவுன்டருக்கு ஆதரவான படமா? சர்ச்சையில் வேட்டையன்!

ஒரு கருத்திற்காக கதையை உருவாக்கும் ஞானவேல் போன்ற இயக்குநர் இந்த சமூகத்திற்குத் தேவை. அவருக்காக வேட்டையன் வெற்றி பெற வேண்டும். சமூகத்தில் நிறைய சகுனிகள் இருக்கின்றனர். நல்லவனாக மட்டுமே இருந்தால் பிழைக்க முடியாது. சாமர்த்தியமும் சாணக்கியத் தனமும் வேண்டும். அவரிடம் இவை இருப்பதால் பிழைத்துக்கொள்வார். ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சினிமாவுக்கு வந்த 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. நீங்கள் கொடுத்த ஆதரவால்தான் இங்கிருக்கிறேன்” எனக் கூறினார்.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து