நாகா்கோவில் வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: நாகா்கோவில் வழியாக செல்லும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாகா்கோவிலை அடுத்த ஆரல்வாய்மொழி-வடக்கு பணகுடி இடையே உள்ள லெவல் கிராசிங்கை அகற்றிவிட்டு புதிதாக சுரங்கபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

ரயில் மாற்றம்:

தாம்பரம்-நாகா்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் அக்.22-ஆம் தேதி வள்ளியூா் வரை மட்டும் இயக்கப்படும். திருச்சி-திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் அக்.23-ஆம் தேதியும், மதுரை-புனலூா் விரைவு ரயில் அக்.24-ஆம் தேதியும் திருநெல்வேலி வரை மட்டும் இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக இந்த ரயில்கள் வள்ளியூா், திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும். இதேபோல், கன்னியாகுமரி-ராமேசுவரம் அதிவிரைவு ரயில் அக்.24-ஆம் தேதி வள்ளியூரில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது