‘நாகை அரசு மருத்துவமனை மூடப்படாது; வதந்திகளை நம்ப வேண்டாம்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நாகை அரசு மருத்துவமனை மூடப்படும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாகை,

நாகை அரசு மருத்துவமனை மக்களின் பயன்பாட்டிற்காக தொடர்ந்து இயக்கும் என தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"கடந்த ஆட்சிக்காலத்தில் மூடி வைத்திருந்த புதுக்கோட்டை மருத்துவமனையை திறந்து வைத்திருக்கிறோம். கிருஷ்ணகிரி மருத்துவமனையை திறந்து வைத்திருக்கிறோம். தி.மு.க. ஆட்சியில் நாகை அரசு மருத்துவமனை நிச்சயமாக மூடப்படாது. மக்களின் பயன்பாட்டிற்காக நாகை அரசு மருத்துவமனை தொடர்ந்து இயக்கும்.

நாகை அரசு மருத்துவமனை மூடப்படும் என்ற வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம். இந்த மருத்துவமனையில் ஏற்கனவே இருக்கும் வசதிகளோடு, புதிதாக பல்வேறு நவீன வசதிகளையும் கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்."

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!