நாட்டின் பொருளாதார பிரச்னைகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும்: கார்கே

நாட்டின் பொருளாதார பிரச்னைகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும்: கார்கேநாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பது நிறுத்தப்பட வேண்டும்..காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

நாட்டின் அடிப்படை பொருளாதார பிரச்னைகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கார்கேவின் எக்ஸ் பதிவில்,

நரேந்திர மோடி அரசு வேலையின்மை, பணவீக்கம், சமத்துவமின்மை போன்றவற்றால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை குழிக்குள் தள்ளியது. வேலையின்மை விகிதம் 9.2 சதவீதமாக இருப்பதால் இளைஞர்களின் எதிர்காலம் பயனற்றதாக உள்ளது.

20 முதல் 24 வயதுடையவர்களுக்கு வேலையின்மை விகிதம் 40 சதவீதமாக உயர்ந்துள்ளது. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாகவும், குறைந்த விலையில் 50 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் பொய்யாகிவிட்டது.

ஏழு பொதுத்துறை நிறுவனங்களில் 3.84 லட்சம் பேர் அரசு வேலைகளை இழந்துள்ளனர். பணவீக்கத்தின் அழிவு உச்சத்தில் உள்ளது. மாவு, பருப்பு, அரிசி, பால் சர்க்கரை, உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதன் விளைவாக குடும்பங்களின் சேமிப்பு 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் பொருளாதார சமநிலையின்மை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் கிராமப்புறங்களில் வேலையின்மை கணிசமாக அதிகரித்துள்ளது. அங்கு மே மாதத்தில் 6.3% ஆக இருந்த வேலையின்மை 9.3% ஆக அதிகரித்துள்ளது.

நாட்டின் அடிப்படை பொருளாதார பிரச்னைகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் என்றும், நாட்டின் பொருளாதாரத்தைத் தன்னிச்சையாக சீர்குலைப்பது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

Related posts

பெங்களூருவில் பயங்கரம்: முக்கியக் குற்றவாளியைக் கண்டறிந்த காவல்துறை!

நிமிர்ந்தால் ஆயிரம் கலையழகு… மீஷா ஐயர்!

காதல்ஜோடியிடம் பணம் பறிப்பு! காவலர் இடைநீக்கம்!