நாட்டின் முதல் முன்பதிவில்லா ‘வந்தே மெட்ரோ’ சேவை: குஜராத்தில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

குஜராத்,

பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் குஜராத் பயணத்தின் போது, நாட்டின் முதல் 'வந்தே மெட்ரோ' சேவையை நாளை மறுநாள் (செப்டம்பர் 16-ந் தேதி) தொடங்கி வைக்க உள்ளார்.

இதன்படி குஜராத் மாநிலம் அகமதாபாத் – புஜ் இடையேயான வந்தே மெட்ரோ ரெயில் சேவை தொடங்க உள்ளது. முழுவதும் குளிர்சாதன பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லா ரெயிலாக 'வந்தே மெட்ரோ' ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக மேற்கு ரெயில்வே (அகமதாபாத் பிரிவு) மக்கள் தொடர்பு அதிகாரி பிரதீப் சர்மா கூறுகையில், வந்தே மெட்ரோவில் பயணம் செய்ய புறப்படுவதற்கு சற்று முன் பயணிகள் கவுண்ட்டரில் இருந்து டிக்கெட்டுகளை வாங்கலாம். இந்த ரெயிலில் 2,058 நிற்கும் மற்றும் 1,150 அமர்ந்து பயணிக்கும் பயணிகளுக்கு இடமளிக்கும்" என்று அவர் கூறினார்.

அதிகாரிகள் கூறிய தகவல்படி, அகமதாபாத்-புஜ் வந்தே மெட்ரோ சேவை ஒன்பது நிலையங்களில் நின்று 360 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி 45 நிமிடங்களில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் கடக்கும். இது புஜில் இருந்து காலை 5:05 மணிக்கு புறப்பட்டு 10:50 மணிக்கு அகமதாபாத் சந்திப்பை அடையும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து